வியாழன், 27 ஆகஸ்ட், 2026
செவ்வாய், 28 ஜூலை, 2026
ஸ்ரீ பாலசுப்பிரமானிய சுவாமிகோவில்
சுவிற்சர்லாந்து நிர்வாகத்தின் பொதுச்சபையின் ஆலோசனை கூட்டம் www.vayaloormurugan.com
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
காலம் --02.08.2026 ஞாயிறுகாலை 10.30 மணி
இடம்--Bumpliz str 21. 3018 Bern
நிகழச்சி நிரல்
---------------------
இறைவணக்கம்
தலைவர் உரை
செயலாளரின் கடந்தகால செயல்பாடுகள் விளக்கவுரை
பொருளாளரின் நிதிநிலை விளக்கவுரை
ஆலோசனைகள்
1.2026 குடமுழுக்கு ,திருவிழா பற்றியது
2. குடமுழுக்கு மலர் ஆய்வு
3. ஆலயத்தின்கிராமத்துக்கான சமூகப்பணி திட்டங்கள்
4. எதிர்கால செயல்பாடுகள் திட்டவரைவுகள்
5. அடுத்த பொதுச்சபைகூட்டம் நிர்வாகதெரிவு பற்றிய நிகழ்ச்சி நிரல்
6.வேறு ,, சபையோர் குறிப்புகள்
7. நிறைவுரை
ஆலயத்தின் முன்னேற்றம் கருதி பன்முக ஆலோசனைகளை நடாத்த வேண்டிருப்பதால் சிரமம் பாராது அனைவரையும் பங்கேற்று சிறப்பிக்குமாறு வயலூர் முருகன் அருள்கூடி அழைக்கின்றோம். நன்றி
வயலூர் முருகன் பெயரோடு
சிவ-சந்திரபாலன்
செயலாளர்
சுவிஸ் நிர்வாகம்
27.07.2026
வியாழன், 11 ஜூன், 2026
வணக்கம் முருகன் அடியார்களே
இதுவரை வயலூர் முருகன் கும்பாபிஷேக மலர் கிடைககாதவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் ஆலயத்தில் நேரடியாகவும் யாழ் நகரில் அல்லது கொழும்பு நகரில் கூட பெற்றுக் கொள்ள முடியும்
வெள்ளி, 15 மே, 2026
மஹா கும்பாபிஷேக மலர் வெளியீட்டு வைபவம்
ஈழத்தின் வளமணக்கும் புங்குடுதீவு மடத்துவெளி மண்ணிலே,
நெற்கதிர்கள் காற்றோடு தலைஅசைத்து நிற்க,
அவற்றின் நடுவே அருளொளி வீசும்
ஶ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
இன்று பக்தி வெள்ளத்தில் நனிந்தது.
அடியார்களின் உள்ளங்களில் அருளாய் வாழும்
வயலூர் முருகன்
மஹா கும்பாபிஷேக மலர் வெளியீட்டு வைபவம்,
இன்று மதிய வேளையில்
மழையும் காற்றும் மும்முரமாய் வீசியபோதிலும்
அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது
பக்தர்களின் பேராதரவோடும் பக்தி பரவசத்தோடும்
சிறப்பாக இனிதே நடைபெற்றது.
மடத்துவெளி வயல்வெளிகளில்
அசைந்தாடிய நெற்கதிர்கள் கூட
“வேல் வேல் முருகன்” என்று துதித்ததுபோல்,
திருநீற்றின் மணமும் பக்தியின் அதிர்வும் பரவியது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




